திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள செல்லிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்லப் பாபு சம்பவத்தன்று இவர் மேட்டுப்பாளையம் பகுதியில் பிளளா பாளையம் கிராமத்தில் உள்ள தனது பேத்தியை பார்ப்பதற்காக சென்றவர் பார்த்து விட்டு மீண்டும் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக துறையூர் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்பொழுது தனது கழுத்தில் அனிந்திருந்த 3 1/2 சவரன் நகை காணாமல் போனது. இது குறித்து இவர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் இதுபோல் வெங்கடேச புரத்தை சேர்ந்த ராஜாம்பாள் என்பவர் தனது சொந்த வேலையாக துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துவிட்டு மீண்டும் அவர் ஊருகு செல்வதற்காக பேருந்து நிலையித்தில் இருந்தபோது கழுத்தில் அணிந்திருந்த இரண்டு சவரன் மதிப்பிலான நகை காணாமல் போனது குறித்து அவர் துறையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இரண்டு சம்பவம் குறித்து துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் சமயபுரம் பகுதியில் திருட்டு வழக்கில் கைதான காளியம்மாள் மற்றும் கல்பனா ஆகியோர் ராஜம்மாள் செல்லப் பாப்பு ஆகியரிடம் செயின் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதனை அடுத்து ஏற்கனவே குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்ட இவர்களை மீண்டும் துறையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர் அவர்களிடமிருந்து திருடு போன நகைகளை பறிமுதல் செய்தனர்.