திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள செவந்தலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நடராஜ். இவர் தனது நிலத்தில் கோரை பயிர் சாகுபடி செய்துள்ளார்.
இந்நிலையில் நடராஜ் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச நேற்று சென்றுள்ளார்.
அங்கு மனித எலும்பு கூட்டின் பாகங்கள் கிடந்துள்ளது. இது குறித்து முசிறி காவல் நிலையத்துக்கு நடராஜ் தகவல் தெரிவித்துள்ளனர். காவல் ஆய்வாளர் செந்தில்குமார் உதவி ஆய்வாளர்கள் திருப்பதி, கோகிலா, வடிவேலு மற்றும் போலீசார் நேரில் சென்று கோரைகாட்டில் சிதறி கிடந்த மனித எலும்புக்கூடுகளை சேகரித்து முசிறி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர் ., இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.