திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ள வெங்கடாசலபுரம் ஸ்ரீஅனந்த நாராயண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான சுமார் 7 ஏக்கர் 58 சென்ட் நிலம் கடந்த 20 வருடங்களுக்கு முன் சோபனபுரதை சேர்ந்த பாப்பு என்பவர்குத்தகைக்கு எடுத்திருந்தார் அவர் இறப்பிற்க்கு பின் அந்த நிலத்தை அவரது மகன் பராமரித்து வந்த நிலையில் கடந்த 20 வருடங்களாக சோபனாபுரம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் என்பவர் கோவிலுக்கு செலுத்த வேண்டிய வரி வசூல் தொகை வழங்காமல் இருந்த நிலையில் ஏழு ஏக்கர் 58 சென்ட் நிலத்தை
அறநிலையத்துறையினர் அவரிடம் இருந்து நீதி மன்ற உத்திரவின் பேரில் மீட்டனர் கடந்த 20 வருடங்களாக கோவிலுக்கு குத்தகை கட்டாமல் இருந்து வந்த நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது இது சந்தை மதிப்பு சுமார் ஒரு கோடியே 50 லட்சம் என தெரிகிறது.
இதுபோன்று கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து உள்ளவர்கள் முறையாக குத்தகை வரி கட்டவில்லை என்றால் நடவடிக்கை தொடரும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.