திருச்சி மாவட்டம், நெம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடியைச் சேர்ந்த சேகர் மகன் அப்பாஸ். கடந்த மாதம் 12 ந்தேதி ஒரே சமூகத்தைச் சேர்ந்த தாளக்குடியைச் சேர்ந்தவர்களுக்கும்,அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர்களுக்கும் என இரு தரப்பினருக்கும் இடையே முன் விரோதத்தில் ஏற்ப்பட்ட மோதலில் அரிவாளால் வெட்டி விட்டு நாட்டு வெடிகுண்டு வீசிவிட்டு தப்பி ஓடினார்.
இந்த வழக்கில் இரு தரப்பினரையும் சேர்ந்த 7 பேரை சமயபுரம் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் தப்பிச் சென்ற முக்கிய குற்றவாளியை திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். அப்போது பிச்சாண்டார் கோவில் ரயில்வே ஸ்டேஷன் பின்புறம் உள்ள ஒரு வீட்டில் அப்பாஸ் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலறிந்த திருச்சி மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை
போலீசார் பதுங்கியிருந்த குற்றவாளியை சுற்றி வளைத்தனர்.அப்போது போலீசார் சுற்றி வளைத்ததையறிந்த அப்பாஸ் வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார்.இதில் குற்றவாளி அப்பாஸின் வலது கால் முறிந்தது.இதனைத் தொடர்ந்து அப்பாஸை தனிப்படை போலீசார் கைது செய்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அப்பாஸ் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.