Skip to content
Home » திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….

திருச்சியில் சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த நத்தர்வலி தர்காவில் தமிழ்நாடு சிறுபான்மை வாரியத் தலைவர் அருண், துணைத் தலைவர் இறையன்பு குத்தூஸ், வாரிய உறுப்பினர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது தர்காவில் பிரார்த்தனையும் செய்தனர். அப்போது நத்தர்ஷா தர்காவில் அறங்காவலர் அல்லாபக்ஷ் என்கிற முகமது கெளஸ் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். தர்காவில் மேம்பாட்டு பணிக்காக நிதி ஒதுப்பதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது .

ஆனால் தற்போது அது வழங்கப்படவில்லை எனவே அந்த நிதியை உடனே வழங்க வேண்டும். தர்காவில் மழை பெய்தால்‌ வெள்ளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. எனவே, இதற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சிறுபான்மை வாரியத் தலைவர் ஜோ.அருண் கூறுகையில்…

நத்தர் வலி தர்கா நிர்வாகிகளின் கோரிக்கைகள் தமிழக முதல்வரின் கவனத்திற்கும், துறை அமைச்சர் நாசரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

வக்பு வாரிய சட்டத்தை பொறுத்தவரை தமிழக அளவில் நாங்கள் எதிர்த்து உள்ளோம். 1995ல் மாற்றப்பட்டு அதன் குறைகளை நிவர்த்தி

செய்யப்பட்டு உள்ள அந்த ஒழுங்கு முறையே சரியானது என்பதே எங்களுடைய ஒட்டுமொத்த கருத்தாகும்.
தற்போதைய புதிய நடைமுறைகள் எங்களுக்கு ஏற்புடையதாக இல்லை.
ஏற்கனவே பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அந்த சட்டங்களை நடைமுறைப்படுத்தினாலே போதும் என்பதே எங்களது நிலைப்பாடு.

ஒரு நாடு ஒரு தேர்தல் சட்ட மசோதா கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும் என 220 பேர் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்ற கூட்டுக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டாகம் இந்த சட்டம் நிறைவேற வாய்ப்பு இல்லை எனவே இது சாத்தியமற்ற ஒன்று என தெரிகிறது என தெரிவித்தார்.

ஆய்வின் போது நிர்வாக தலைமை அறங்காவலர் அல்லாஹ்பகஷ் என்கிற முகமது கெளஸ் தர்கா கலீபா
சையது சாதாத் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்

0 thoughts on “திருச்சி நத்தர்வலி தர்காவில் சிறுபான்மை வாரிய குழுவினர் ஆய்வு….”

  1. Когда банки отказывают, на помощь приходят надежные МФО. Мы собрали список компаний, где вы легко сможете оформить займ без отказа срочно на карту . Получите нужную сумму на карту мгновенно, а ставки останутся честными – не более 0.8% в сутки. Финансовые трудности можно решить быстро!

    Comment awaiting moderation.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!