ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு “ஆலிமா நத்ஹரியா” பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் தலைமை வகித்தார். நிஸ்வான் மதரசா முதல்வர் இமாம் சையது முனாப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மகளிர் அணி தேசிய தலைவி, மாமன்ற உறுப்பினர் பாத்திமா முசபர் கலந்து கொண்டு, மதரஸாவில் பயிற்சி முடித்த மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டி
சிறப்புரையாற்றினார். மேலும் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை பொதுச் செயலாளர் அன்வர் பாதுஷா கலந்து கொண்டு சிறப்பு பேருரை வழங்கினார்.
மேலும் இந்த விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் ஹபீபூர் ரஹ்மான், மமக துணை செயலாளர் அப்துல் ரஹ்மான், எஸ்டிபிஐ மாநில செயலாளர் அப்துல்லா ஹசான் பைஜி, 21 வது வார்டு மாமன்ற உறுப்பினர் மும்தாஜ் பேகம், நத்ஹரியா முஸ்லிம் ஜமாத் தலைவர் சையது சம்சுதீன் என்கிற அக்பர், பரம்பரை ஆரிப் உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகளை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு மாணவிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர். இறுதியாக தர்கா சதர் கலீபா சையது ஹயாத் (எ) சாதாத் நன்றியுரை வழங்கினார்.