திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகர் எம்ஜிஆர் நகரில் நாகம்மன் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில் கணக்காளராக முத்து நாடாரும் கோவில் பராமரிப்பு பணிகளை முத்துலட்சுமி என்பவரும் கவனித்து வந்தனர் நேற்று இரவு 10 மணிக்கு கோவை நடையை சாத்திவிட்டு வீட்டுக்குச் சென்றனர்.
இன்று காலை அந்தப் பகுதியில் சென்றவர்கள் கோவில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பது கண்டு முத்து நாடாருக்கு தகவல் கொடுத்தனர். மர்ம நபர்கள் நள்ளிரவு கோவிலுக்கு வெளியே இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் காசுகளை கொள்ளையடித்து சென்றனர். சுமார் ரூ.5 ஆயிரம் வரை இருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மாதந்தோறும் கோவில் உண்டியலை திறந்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து நிர்வாக தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். நாளை உண்டியலை திறக்க இருந்தனர். இந்நிலையில் உண்டியல் பணத்தை திருடி சென்ற சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.