திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே அமைந்துள்ள ஸ்ரீ நாகப்ப சுவாமி ,ராஜ கணபதி, சந்தன கருப்பண்ண சுவாமி திருக்கோவில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 22 ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு கடந்த ஒன்றாம் தேதி திரு காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு முதல் கால யாக பூஜை நடைபெற்றது .
இதனை தொடர்ந்து இன்று காலை நான்காம் கால யாக பூஜை
நடைபெற்று மகா கும்பாபிஷேகம், மகா தீபாரனை நடைபெற்றது .
இந்த கும்பாபிஷேக விழாவில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கோவில் சார்பாக பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இதனை தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் .