Skip to content
Home » திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சியில் வீடு புகுந்து மூதாட்டியை தாக்கி கொள்ளை…. திருடனை பிடித்த பொதுமக்கள்….

திருச்சி, வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியதோடு கத்தி முனையில் அவர் அணிந்திருந்த ஐந்தே முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். இதில் கனகாம்பிகை போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு தப்பியோட முயற்சித்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் உறையூர் போலீசார் அங்கு வந்து திருடனை கைது செய்து போலீஸ் ஸ்டேசன் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டது மண்ணச்சநல்லூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த சசிகுமார்(31) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். வீடு புகுந்து கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த கனகாம்பிகை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!