மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்..
இந்த நிகழ்ச்சியில் மாநகர மேயர் அன்பழகன்,
மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, பகுதி செயலாளர்கள் போட்டோ கமால், மோகன்தாஸ்,
காஜாமலை விஜி , இளங்கோ மற்றும் கோட்ட தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மாலை அணிவிக்கும் மரியாதை செலுத்தினர்.