Skip to content
Home » திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பெருகி வரும் போதை ஒழிப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவது,
டங்ச்டன் சுரங்க திட்டத்தை முழுமையாக ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும், இரண்டு தினங்களுக்கு முன்பு ராமநாதபுரத்தில் ஏற்பட்ட ஆம்புலன்ஸ் விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும்,இயக்க பணிகளை கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் பொதுச் செயலாளர் திருப்பூர் ஹாலிதீன்,. பொருளாளர் செய்யார் அப்பாஸ்,துணைத் தலைவர் முஷாவுதீன்,துணைப் பொதுச் செயலாளர் திருச்சி மஞ்சக்குடி பாபு உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.