திருச்சி எக்ஸெல் குழுமங்களின் தலைவரும், மக்கள் நீதி மையம் கட்சியின் முன்னாள் பொதுசெயலாளரும், முன்னாள் ரோட்டரி மாவட்ட
ஆளுநருமான முருகானந்தம் சர்வதேச ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருச்சியில் இன்று முருகானந்தத்திற்கு ரோட்டரி நிர்வாகிகள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் முருகானந்தம் நிருபர்களிடம் பேசுகையில் .. ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவர்களாக இதுவரை 4 இந்தியர்கள் இருந்துள்ளனர்.
ரோட்டரியை பொருத்தமட்டில் இந்த 17 இயக்குனர்கள் குழு இந்த சர்வதேச அமைப்பின் கொள்கைகளை நிறுவுகிறது.
வருகிற 2025- 27 பன்னாட்டு ரோட்டரி இயக்குனராக தேர்வு செய்யப்பட்டுள்ள எனக்கு இந்தியா நேபாளம், பூட்டான், இலங்கை,மாலத்தீவு ஆகிய நாடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தலைமைப் பண்பு மற்றும் சமூக சேவைகளை ஈடுபடுத்திக் கொள்ள குழந்தைகளை இப்போது ரோட்டரி அமைப்புகளில் சேர்த்து விட வேண்டும். அரசியலில் இருந்து ஒதுங்கவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை, என்றார்..