Skip to content
Home » திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருச்சி கொலை வழக்கு கைதி…… மாரடைப்பில் பலி

திருவெறும்பூர் அருகே உள்ள பனையக்குறிச்சியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (35), பிரபல ரவுடியான இவர் அந்த பகுதியில் உள்ள பரிமளா என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.  பின்னர் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த நிலையில் பரிமிளாவை பொது இடத்தில் வைத்து சுந்தர்ராஜ் தாக்கியுள்ளார்.

இதை அறிந்த பரிமளாவின்  அண்ணன் கணேசன்  மூர்த்திக்கு கடும் கோபம் ஏற்பட்டது.   கடந்த செப்டம்பர் மாதம் 12ம் தேதி இரவு கணேசமூர்த்தியின் மகன் வடிவேல் மற்றும் 17 வயது மகன் ஆகியோர் சுந்தர்ராஜிற்கு அளவுக்கு அதிகமாக மது  வாங்கி கொடுத்துள்ளனர்.

போதையில்   இருந்த சுந்தர்ராஜை, கணேசமூர்த்தி அவரது மகன் வடிவேல் மற்றும் 17 வயது சிறுவன், பரிமளா மகன் மாரிமுத்து ஆகிய நான்கு பேரும் சேர்ந்து சுந்தர்ராஜின் தலையை துண்டித்து படுகொலை செய்தனர்.

திருவெறும்பூர் போலீசார்  வழக்குப்பதிவு செய்து,  கணேசமூர்த்தி, வடிவேல், மாரிமுத்து மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரையும் கைது செய்துதிருச்சி மத்திய சிறையில்  அடைத்தனர்.

இந்த நிலையில் சுந்தர்ராஜ்  கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளியான கணேச மூர்த்திக்கு  இன்று அதிகாலை  சிறையில் திடீர்  மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கணேசமூர்த்தி இறந்தார்.  இது குறித்து கே. கே. நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!