Skip to content

திருச்சி மாநகராட்சி: ரூ.128.95 கோடி பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்

  • by Authour

திருச்சி மாநகராட்சி கூட்டம் இன்று நடந்தது. இந்தகூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசியதாவது:
திருச்சி மாநகராட்சியில் நிலுவையில் உள்ள வரி மற்றும் வரியில்லா இனங்கள் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டு, கீழ்க்கண்ட பணிகள் பொதுநிதியின் கீழ் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நீதிமன்றம் முதல் விமான நிலையம் வரை புராதன தெருவிளக்குகள் ரூ.10.00 கோடி மதிப்பீட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்

கீழ்க்கண்ட பணிகள் மாண்புமிகு நகர்ப்புற அமைச்சர் அவர்கள் வழியாக அரசிடம் உரிய நிதியுதவி பெற்று மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படும்
பஞ்சப்பூர் பகுதியில் சுமார் ரூ.115 கோடி மதிப்பீட்டில் 19.20 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி சக்தியில் மின்சாரம் தயாரிக்கும் மையம் கட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு  அன்பழகன் பேசினார்.

பிறகு மேயர் அன்பழகனிடம் பட்ஜெட்டில் 128.95 கோடிபற்றாக்குறை ஏற்பட்டுள்ளது இதனை மாநகராட்சி எப்படி சமாளிக்கும் என்று நிருபர்கள் கேட்டதற்கு திருச்சி மாநகராட்சிக்கு வரவேண்டிய வரி பாக்கி மற்றும் நிலுவை தொகைகளை வசூல் செய்து பற்றாக்குறையை சரி செய்வோம் என்று கூறினார்.

error: Content is protected !!