கலைஞர் நூற்றாண்டு விழா ,உலக இயன்முறை மருத்துவர்கள் தின விழாவை முன்னிட்டு மாபெரும் இலவச மருத்துவ முகாமினை மாநகராட்சி மேயர் அன்பழகன் துவக்கி வைத்தார். கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக திருச்சி இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றம் மற்றும் திருச்சி அப்போலோ மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாமை நடத்தியது. இந்த முகாம் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பகுதியில் உள்ள ஆர்.சி நடுநிலைப் பள்ளியில் இயன்முறை மருத்துவர்கள் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மருத்துவ முகாமில் இயன்முறை மருத்துவ சிகிச்சை, ரத்த பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோதனை, மகளிர்
மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனை, இலவச கண் பரிசோதனை, எலும்பு பரிசோதனை, பொது மருத்துவம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டு மாத்திரைகள் மற்றும் மருத்துவர்களின் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். இந்த முகாமில் மாவட்ட செயலாளர் சரவணகுமார், மாநில ஒருங்கிணைப்பு செயலாளர் ஸ்ரீதர், கலந்து கொண்டனர்.