Skip to content

ஜாமீனில் வந்தவரை அடித்துக்கொன்ற 2 பேர் கைது… திருச்சியில் சம்பவம் ..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கீழக்குமரேசபுரத்தைச் சேர்ந்தவர் சரவணன் வயது (48) இவர் பெயிண்டர் வேலை செய்து வந்தவர் இவரது மனைவி சவுந்தரவல்லி இவர் அப்பகுதியில் உள்ள டெக்ரேசன் கம்பெனியில் வேலை செய்து வந்தார் இந்நிலையில் அந்த கம்பெனியில் மேனேஜராக பணிபுரிந்து வந்த ராதாகிருஷ்ணன் என்பவரிடம் கள்ளத் தொடர்பு ஏற்பட்டது கடந்த ஆகஸ்ட் மாதம் சௌந்தரவல்லி வெளியூர் சென்ற நிலையில் சரவணனுக்கு மது வாங்கி கொடுத்து போதையில் இருந்த போது சரவணனை ராதாகிருஷ்ணன் கொலை செய்து விட்டு சௌந்தரவல்லிக்கு தகவல் தெரிவித்து தலைமறைவாகிவிட்டார். பின்னர் சௌந்தரவல்லி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் போலீசார் ராதாகிருஷ்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் கடந்த வாரம் ஜாமினில் வந்த ராதாகிருஷ்ணன் திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் கண்டிஷன் பெயிலில் கையெழுத்து போட்டு வந்தார். இந்நிலையில் ராதாகிருஷ்ணன் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு படுக்காயங்களுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 17ஆம் தேதி காலை இறந்துவிட்டார்.இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்ததில் ராதா கிருஷ்ணன் கீழ குமரேசபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன், (22) சேது (24), கீர்த்தி வாசன் (17) ஆகியோருடன் மது அருந்திவிட்டு வாகனத்தில் செல்லும் பொழுது மேற்படி நபர்களுடன் தகராறு ஏற்படவே மூன்று பேரும் சேர்ந்து ராதாகிருஷ்ணனை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த நிலையில் தான் திருச்சி அரசு மருத்துவமனையில் ராதாகிருஷ்ணன் சேர்க்கப்பட்டு இறந்து விட்டார். என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனை அடுத்து திருவெறும்பூர் போலீசார் ராதா கிருஷ்ணனின் வழக்கை சந்தேக மரணத்தில் மாற்றம் செய்து கொலை வழக்காக மாற்றி பிரவீன், சேது, கீர்த்தி வாசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர் இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *