திருச்சி எம்பி சிவாவின் மகன் சூர்யா சிவா. இவர் பாஜகவில் மாநில பொது செயலாளராக உள்ளார். இன்று திருச்சி எஸ்பியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியதாவது…. எனது குடும்பத்துடன் வசித்து வருகிறேன். நான் தற்போது BJP கட்சியில் மாநில பொது செயலாளர், OBC பொறுப்பில் உள்ளேன். நான் கடந்த 3 வருடமாக சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ் புக்கினை பயன்படுத்தி வந்தேன். இந்நிலையில் எனது பேஸ்புக் பக்கத்தினை கடந்த 04.12.2023 அன்று இரவு முதல் சில சமூக விரோதிகளால் ஹேக் செய்யப்பட்டது. இதனை தெரிந்த நான் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். அவ்வாறு எனது பேஸ் புக்கை ஹேக் செய்த சமூக விரோதிகள் ஆளும் கட்சியான DMK வையும், அதனை சார்ந்த முக்கிய பிரமுகர்களையும் தவறான முறையில் விமர்சித்து தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார்கள். மேற்கூறியவாறு எனக்கு தெரியாமல் செய்யப்படும் பதிவுகளுக்கும் எனக்கும், எந்த சம்மந்தமும் கிடையாது. எனவே எனது முகநூல் பக்கத்தினை ஹேக் செய்து அந்த பேஸ்புக்கின் வாயிலாக தவறான கருத்துகளை பரப்பி எனக்கு கலங்கத்தை விளைவிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வரும் சமூக விரோதிகளை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுத்தும், எனது பேஸ் புக்கினை எனக்கு மீட்டளிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்.
