.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், திருச்சி பாராளுமன்ற மக்களவை உறுப்பினருமான திருநாவுகரசர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், மகளிர் திட்ட அலுவலர் ரமேஷ்குமார், மாவட்ட ஊராட்சித் தலைவர் ராஜேந்திரன், மாநகர காவல் துணை ஆணையர் அன்பு உள்ளிட்ட காவல் துறை அலுவலர்கள், அரசுத்துறை உயர் அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.கூட்டத்தில் திருச்சி மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்துஆலோசிக்கப்பட்டு திட்டங்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறினர்.