திருச்சி புள்ளம்பாடி பகுதியில் உள்ள மனநல காப்பகம் கட்டிடத்தை திறந்து வைக்க தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார்.
அவரை வரவேற்க தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.