திருச்சி மாவட்டம், முசிறியில், முசிறி நகராட்சி மற்றும் எம்ஐடி கல்வி நிறுவனங்கள் இணைந்து புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இப்பேரணி நகர் மன்ற அலுவலகம் முன்பு துவங்கியது. இந்நிகழ்ச்சியில் தொட்டியம் பேரூராட்சி தலைவர் சரண்யா பிரபு, நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமார் தலைமை வகித்து துவக்கி வைத்தார். அப்போது எம் ஐ டி செவிலியர் கல்லூரி மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் புகையில்லா போகி பண்டிகை குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியப்படியும், கோஷமிட்டனர். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர். முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர். இதில் நகராட்சி உறுப்பினர்கள் பாலகுமார், விசுவநாதன், இந்திரா சேகர், சசிகலா, லட்சுமி, தலைமை எழுத்தர் சேவியர், சுகாதார மேற்பார்வையாளர் சையத் பீர், கல்லூரி பேராசிரியர்கள் சரவணகுமார், செல்வராஜ், ராமச்சந்திரன், ரங்கநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.