திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள உப்பிலிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கடாஜலபுரம் ஊராட்சியில் வசிப்பவர் விவசாயி வேலாயுதம் இவர் அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார் மேலும் இவர் கால்நடைகளை வளர்த்து பராமரித்து வருகிறார் வழக்கம் போல் தனது வயலில் இரண்டு பசு மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்ற பொழுது மாடுகள் வயலில் கொண்டிருந்தது அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடியுடன் கூடிய கனமழை பெய்தது அப்போது எதிர்பாராத விதமாக வயலில் மேய்த்துக் கொண்டிருந்த மாடுகளின் மீது மின்னல் தாக்கியாது இதனால் சம்பவ இடத்திலேயே 2 பசு மாடுகளும் உயிரிழந்தது கால்நடை மருத்துவர்கள் பசுக்களை உடல் கூறு ஆய்வு செய்து பின்பு ஜேசிபி இயந்திரம் கொண்டு பூமியில் புதைத்தனர்.
மின்னதாக்கி பசு மாடுகள் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது