இச்சாலையில் செல்ல முடியாமல் வழுக்கி விழுந்தும், விபத்துகளில் சிக்கியும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். ஒருவர் நடந்து செல்லும்போது இன்னொரு காரோ, டூவீலரோ வந்தால் நடந்து போகிறவர் சேற்றில் குளித்து விட்டுத்தான் வீடுபோய் சேருகிறார்கள். அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு செல்பவர்களின் நிலைமை மோசமாகி விடுகிறது.
சாலையில் நடந்து செல்லும்போது வாகனங்கள் வந்தால் ஒதுங்கி, பதுங்கி நிற்க வேண்டி உள்ளது. வாகனங்கள் சென்ற பிறகே பாதசாரிகள் அந்த சேற்று சாலையில் கடந்து போக வேண்டி இருக்கிறது.
இதுபற்றி சம்பந்தப்பட்ட கவுன்சிலர்களிடம் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இத்தனைக்கும் இந்த பகுதி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேசின் தொகுதிக்கு உட்பட்டது என்பது தான் ஹைலைட். அமைச்சரின் தொகுதியிலேயே 2 நாள் மழைக்கு சாலைகள் வயல்காடாக மாறி விட்டது.
உடனடியாக இந்த சாலைகளை சீரமைக்காவிட்டால் இன்னும் ஒரு வாரத்தில் இங்கு நாற்று நடும் போராட்டம் நடத்துவோம் என அந்த பகுதி மக்கள் அறிவித்து உள்ளனர்.