தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இன்று (19.10.2024) திருச்சி மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மணிமண்டபத்தில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் திருவுருவச்சிலை, நீதிக்கட்சியின் வைரத்தூண் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் அவர்களின் திருவுருவச்சிலை, ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர் அவர்களின் திருவுருவச்சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, மணிமண்டப வளாகத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், மாவட்ட கலெக்டர் மா.பிரதீப் குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் அ.சௌந்தரபாண்டியன் , எம்.பழனியாண்டி அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Tags:திருச்சி. சிலை