திருச்சி, கே. கே. நகர், அய்யப்பன் நகர், வீனஸ் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்( 38). இவர் அந்த பகுதியில் வீடு ஒன்றை கட்டி வருகிறார். அக்கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்ச மின்மோட்டார் ஒன்றை பொருத்தியுள்ளார். அந்த மின் மோட்டார் காணவில்லை கே.கே.நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மின்மோட்டார் திருடியதாக எடமலைப்பட்டிபுதூர், அன்பிலார் தெருவை சேர்ந்த சரோன் (19) மற்றும் 16வயது சிறுவன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.