திருச்சி மாநகர் பட்டாபிராமன் தெரு பாலன் நகர் பகுதியில் 80-க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு கடந்த 3 மாதமாக குடிநீர் வழங்கவில்லை மற்றும் தெரு விளக்கு சரிவர எரிவது இல்லை இது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் மாநகர மேயருமான அன்பழகனிடன் மனு அளித்ததும் எந்த பயனும் என கூறி தேர்தல் புறக்கணிப்பதாக அறிவிப்பு பலகை வைத்து கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் சாமதானம் செய்ய
முயற்சித்தனர். ஆகிணும் அவர்கள் சமாதானம் ஆகவில்லை. இதன் காரணமாக திருச்சி மாநகர் மேயர் நேரில் வந்து உடனடியாக தண்ணீர் திறக்கவும் , மின்சாரம் வழங்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர் தொடர்ந்து சரிசெய்யும் பணி துவங்கினர். இந்நிலையில் பாஜகவினர் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலைய மேயர் எப்படி வரலாம் என கூறி அப்பகுதியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.