மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக திருச்சி மாநகர் மாவட்ட அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
1. கழகத்தின் முதன்மைச் செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான இளம் புயல் அண்ணன் துரை வைகோ அவர்களின் நாடாளுமன்ற பணியினை அகிலமே போற்றுகின்றது அவரது செயல்பாடுகள் காரணமாக தலைவர் வைகோ தலைமையில் இளம் தலைவர் துரை வைகோ வழிகாட்டுதலில் திருச்சி மாநகர் மாவட்டம் செயலாற்ற காத்துகொண்டிருக்கிறது .
2. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சிறு சிறு சல சலப்புகளை உண்டாக்கி கழகத்திற்கு ஊறு விளைவிக்கின்ற தீய சக்திகளை உடனே களை எடுத்து இயக்கத்தை காப்பாற்ற வேண்டும்,
தமிழகமெங்கும் சில இடங்களில் கழகத்தில் கலகம் விளைவிக்கும் துரோகிகளை தூண்டிவிடும் கழகத்தின் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் தமல்லை சத்யா அவர்களை இயக்கத்தில் இருந்து உடனடியாக நீக்கி கழகத்தை காப்பாற்ற தலைமைக் கழகத்தையும், கழகப் பொதுச் செயலாளரையும் பணிவுடன் திருச்சி மாநகர் மாவட்ட கழகம் கேட்டுக் கொள்கிறது. மேற்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த தகவலை மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு தெரிவித்து உள்ளார்.
மதிமுகவில் வைகோவுக்கு அடுத்த நிலையில் உள்ள துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யாவுக்கும், துரைவைகோவுக்கும் சில மாதங்களாக பனிப்போர் நடந்து வந்த நிலையில் அவரை நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் மல்லைசத்யாவை நீக்க வேண்டாம் என்பதில் வைகோ உறுதியாக இருக்கிறாராம். இதனால் பாமகவில் உள்கட்சி மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.