திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த கோட்டப்பாளைய அடுத்த வலையப்பட்டியை சேர்ந்தவர் தேவி ( 38.) எம்எஸ்ஸி பிஎட் பட்டதாரி ஆசிரியை . துறையூரிலுள்ள அரசு உதவி பெறும் தனியார் மேல் நிலைப்பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிவதுடன் , பணி நிமித்தம் துறையூர் சித்திரைப்பட்டி பகுதியில் வாடகை வீட்டில் தனது இரு பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் கடந்த சில மாதங்களாக பிரிந்த வாழ்ந்து வருவதாக தெரிகிறது .
பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு டியூசன் வகுப்புகள் நடத்தியதின் மூலம் மாணவர்களிடையே நெருக்கமானதாக தெரிய வருகிறது . இவரிடம் படித்த துறையூரைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் சந்தேகமடைந்த பெற்றோர்கள் , தனது மகனின் நடவடிக்கைகளை கண்காணித்ததன் பேரில் , இரவு நேரங்களில் ஆசிரியையுடன் வீடியோ காலில் அதிக நேரம் பேசி வருவதும் , படிப்பில் கவனமில்லாமல் இருந்ததையும் , மகனின் உடல் நிலையில் சோர்வு ஏற்பட்டதையும் பார்த்த பெற்றோர் மாணவனையும், ஆசிரியையைும் கண்டித்தனர்.
ஆனாலும் அவர்களிடையே ஏற்பட்ட ஈர்ப்பு குறையவில்லை. இதனால் பெற்றோர் ஆசிரியையின் மீது போலீசில் புகார் செய்ததனர். முசிறி அனைத்து மகளிர் நிலைய ஆய்வாளர் சுப்புலட்சுமி விசாரணை மேற்கொண்டார் . விசாரணையின் அடிப்படையில் ஆசிரியை தேவியை போக்சோ சட்டத்தி்ன் கீழ் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். மாணவன் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.