மார்கழி மாதத்தை முன்னிட்டு அதிகாலையில் அனைத்து கோவில்களும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம் .
இந்த நிலையில் திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள கூத்தைபாரில் உள்ள மருதீஸ்வரர் ஆலயத்தில் இன்று காலை 4.30 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அந்த ஊரில் உள்ள சிறுவர்கள் சிறுமிகள் குங்கிலியத்தில் சாம்பிராணி இட்டு திருப்பாவை திருவெம்பாவை பாடல்களை பாடி திருப்பள்ளி நிகழ்ச்சி (பஜனை ) தேரோடும் வீதிகளில் வலம் வந்தனர். அப்பொழுது அனைத்து கோயில்களுக்கும் சென்று கூத்தைப்பாரை வலம் வந்தனர் சிறுவர் சிறுமிகளை ஊக்குவிக்குவிக்கும் வகையில் சில வீடுகளில் பால் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சி மார்கழி மாதம் முழுவதும் 30 நாட்களும் நடைபெறும் தைப்பொங்கல் அன்று நால்வர் புறப்பாடுடன் நிகழ்ச்சி நிறைவு அடைகிறது.