திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அண்ணா தெருவை சேர்ந்தவர் சுரேஷ். கூலித் தொழிலாளி . மனைவி சவிதா ( 24) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் சுரேஷ் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார் பின்னர் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தபோது சபிதாவை காணவில்லை. இதுகுறித்து சுரேஷ் கண்டோன்மெண்ட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான இளம்பெண் சபிதாவை தேடி வருகின்றனர்.
: திருச்சியில் மோட்டார் சைக்கிளில் பெட்டி, பெட்டியாக போதைப்பொருட்கள் பறிமுதல்..
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் திருச்சி கிராப்பட்டி டிஎஸ்பி பட்டாலியன் ஒன் 2வது கேட் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டனர். சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பெட்டி,பெட்டியாக ஹான்ஸ், பான் மசாலா, கூலிப் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதையடுத்து திருச்சி தற்போது நாகமங்கலத்தில் வசித்து வரும் கல்லுக்குழியைச் சேர்ந்த சாதிக் பாட்சா என்ற வியாபாரியையும் கைது செய்தனர் .
திருச்சியில் 25,000 ரூபாய் மதிப்புள்ள எலக்ட்ரிகல் பொருட்களை திருடிய வாலிபர் கைது..
திருச்சி தென்னூர் வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் சம்சுதீன் (68). இவர் வீடு கட்டும் பணிக்காக மகாலட்சுமி நகர் விஸ்தரிப்பு அருகில் உள்ள தனரத்தினம் நகரில் எலக்ட்ரிகல் வயர் மற்றும் எலக்ட்ரிக்கல் சாமான்கள் வாங்கி வைத்திருந்தார்.சுமார் 25,000 ரூபாய் மதிப்புள்ள இந்த பொருட்கள் திருடு போய்விட்டது. இது குறித்து சம்சுதீன் காந்தி மார்க்கெட் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து திருடியவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் இது சம்பந்தமாக அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்த விஜய் என்ற வாலிபரை கைது செய்து.அவரிடம் இருந்து பொருட்கள் பறிமுதல் செய்தனர்.