திருச்சி பீம நகரில் அமைந்துள்ள அருள்மிகு செடல் மாரியம்மன் திருக்கோவில் புறமைப்பு பணிகள் நடைபெற்று பணிகள் அனைத்தும் முடிவடைந்து அருள்மிகு செடல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு பணிகள் கடந்த திங்கள்கிழமை மூன்றாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி சிறப்பு பூஜைகள் ஹோமங்கள் நடைபெற்று வந்தது.
அதனைத் தொடர்ந்து கடந்த ஐந்தாம் தேதி புதன்கிழமை காலை 7 மணிக்கு திருச்சி காவிரி அய்யாளம்மன் படித்துறையில் இருந்து
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து வந்தனர்.
அதன் பின்னர் கடந்த 6-ம் தேதி வியாழக்கிழமை யில் இருந்து நேற்று எட்டாம் தேதி சனிக்கிழமை வரை ஆறு கால பூஜைகள் நடைபெற்று முடிவடைந்தது.
தனைத் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9. 45 மணி அளவில் யாகசாலையில் இருந்து தீர்த்த குளங்கள் சிவாச்சாரியார்களால் கொண்டுவரப்பட்டு மேளதாளம் முழங்க
சமகாலத்தில் ராஜகோபுரம் மற்றும் பரிகார கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதன் பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட கலசங்களில் ஊற்றப்பட்ட தீர்த்தங்கள் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 12 மணி மூலவருக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணி அளவில் ஸ்ரீ செடல் மாரியம்மன் கோவில் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.
கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.