Skip to content

திருச்சி மாரிஸ் மேம்பால பணி 1 மாதத்தில் முடியும்- துரை வைகோ எம்.பி பேட்டி

ரயில்வேபணிகள், குறைகளை களைதல்  தொடர்பான கலந்தாய்வு கூட்டம்  திருச்சியில் நடந்தது. தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது. இதில்  எம்.பிக்களும் பங்கேற்றனர்.  திருச்சி  எம்.பி. துரை வைகோவும் இதில் பங்கேற்றார். பின்னர் துரை வைகோ கூறியதாவது:

திருச்சியில் இருந்து எர்ணாகுளம், பெங்களூர், திருப்பதி விரைவு ரயில் வண்டிகள் இயக்க வேண்டும்  என ரயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தேன்.

3 ரயில்களில் ஏதாவது ஒரு ரயில் தான் தற்போது வழங்க முடியும் எனவே,பொது மக்களிடம் ஆலோசனை மேற்கொண்டதில் திருச்சி- திருப்பதி ரயில் வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்த பகுதியில் இருந்து   வேலூர் சிஎம்சி மருத்துவமனை, விஐடி கல்லூரிகளுக்கு அதிகமான மக்கள் செல்கின்றனர். எனவே இந்தத் திட்டத்தை
நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளேன்.

திருச்சி ரயில் உயர்மட்டபாலம் மேல குமரேசபுரம், மேலகல்கண்டார்கோட்டை,
ஸ்ரீரங்கம் ரயில்வே பகுதியில் உயர் மட்ட பாலம்,
இனாம்குளத்தூர்
ரயில்வே உயர்மட்ட பாலம், உடையான்பட்டி பாலம் , இவை  அனைத்தும் 15 ஆண்டாக வைக்கப்பட்டு வந்த கோரிக்கை, இவற்றுக்கு  தற்போது ஒப்புதல் தரப்பட்டுள்ளது.

மஞ்சத்திடல், அரியமங்கலம் பகுதிகளில் மெமோ ரயில்வே செட் வரவுள்ளது..எனவே அந்த பகுதியில் ரயில்வே வாகன சுரங்கப்பாதை ஆகியவைகளுக்கு மெமோ செட் பணி வேலையுடன் சேர்த்து பணி மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.

திருவெறும்பூர் ரயில் நிலையத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்வதற்கு
ஒப்புதல் கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
இதுபோல் மேலும் கூடுதல் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நிற்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை வழியாக மதுரைக்கு புதிய ரயில் பாதை எட்டு வருடம் முன்பாக பரிசீலிக்கப்பட்டது. தற்போது எந்த விபரமும் இல்லைஎனக் கூறப்பட்டு உள்ளது ,தற்போது  அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .

முதியோர் மற்றும் ஊடக செய்தியாளருக்கு  ரயிலில் 50 சதவீதம் கட்டணம் சலுகையில் இருந்தது கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது .தற்போது மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது .

பொன்மலை ஜி கார்னர் பகுதியில் சர்வீஸ் ரோடு தொடர்பாக வைக்கப்பட்ட கோரிக்கை குறித்து ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சரிடமும், மற்றும் ரயில்வே அதிகாரிகள், மாவட்ட நிர்வாகத்துடன்   பேசி விரைவில் அதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருச்சியிலிருந்து புறப்படும் ரயில்கள் நீடிப்பதற்கு எந்த தடையும் கிடையாது. திருச்சியில் இருந்து நீடிக்கப்படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட வேண்டும்.

திருச்சி மாநகர் பகுதி உறையூரில் குடிநீர் பிரச்சனையால் சிறுமி இறந்தது குறித்து உடல் உபாதை காரணமாக நாட்டு வைத்தியம் கொடுத்ததினால் அந்த சிறுமி உடல்நலம்  பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்த பின் குழந்தை இறந்துள்ளது.

மெட்ரோ ரயில் தொடர்பாக தமிழக அரசு மதுரை,  கோயம்புத்தூருக்கு திட்டம் கொடுத்துள்ளது.  திருச்சிக்கான எந்த திட்டமும் இல்லை என்பது குறித்து அமைச்சரிடம் தெரிவித்துள்ளேன்.
மதுரை ,கோயம்புத்தூர் மெட்ரோ திட்டத்திற்கு எந்த ஒப்புதலும் இதுவரை வழங்கப்படவில்லை.
அப்படி நடக்கும் பட்சத்தில் திருச்சிக்கான மெட்ரோ ரயில் கொண்டு வரப்படும் என உறுதியாக தெரிவித்தார்.

மாரிஸ் தியேட்டர் அருகில் உள்ள ரயில்வே மேம்பாலம் திட்டம்
மாநில அரசு அதை விரைவுப்படுத்தி வருகிறது.
ரயில்வேவை  பொறுத்தவரை தேக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதத்திற்குள் முடித்து தருவதாக கூறியிருந்தனர்.

இன்று நடைபெற்ற ரயில்வே கூட்டத்தில் கேட்ட போது மே மாதத்திற்குள் விரைவில் முடிந்து விடும் என தெரிவித்துள்ளனர்.

இதேபோல் அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் நடைபெற்றிருக்கும் ரயில்வே பாலமும் விரைவில் முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது  மதிமுக மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!