Skip to content

உலக இருதய தினம்… திருச்சியில் 2023க்கான மாரத்தான் போட்டி….

  • by Authour

திருச்சி எஸ் ஆர் எம் மருத்துவக் கல்லூரியில் 2023 க்கான மூன்றாவது மாரத்தன் போட்டி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜெய்தங்கம் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கல்லூரி சேர்மன் டாக்டர் சிவகுமார் வழிகாட்டுதலின்படி இந்த மாரத்தான் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. இதில் ஆண்களுக்கான 15 கிலோமீட்டர் தொலைவும். பெண்களுக்கு 5 கிலோ மீட்டர் தொலைவிலும் இலக்கு நிர்ணையிக்கப்பட்டது

உலக இருதய தினத்தை முன்னிட்டும் பிங்க் அக்டோபர் தினத்தை முன்னிட்டும் மாரத்தான் விழிப்புணர்பு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினர் லால்குடி துணை கண்காணிப்பாளர் அஜய் தங்கம் கூறுகையில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி மிகவும் முக்கியமானது என்றும் இருதயத்திற்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்றும்

பெண்களுக்கான மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வை குறித்தும் . மாணவர்கள் தேவை இல்லாமல் தீய பழக்கத்திற்கு Drugs ஆளாகி தன்னுடைய உடல் நிலத்தையும் , மனநலத்தையும் கெடுத்துக்கொள்ளக் கூடாது என்றும்அறிவுரை வழங்கினார்.

இந்த விழிப்புணர்வில் சிறுவயதிலேயே இருதய நோயால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருப்பதன் காரணமாகவும், பெண்கள் 25 வயது முதல் மேற்பட்டவர்களுக்கு மார்பக புற்றுநோய் சம்பந்தமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் எஸ்.ஆர்.எம். வளாகத்தில் உள்ள மருத்துவமாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக இந்த மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கத் தொகை பரிசாக வழங்கப்பட்டது.

இதில் முதல் பரிசாக மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாயும் இரண்டாம் பரிசாக 8000 ரூபாயும் மூன்றாவது பரிசாக 5000 ரூபாயும் வழங்கப்பட்டது. பெண்களுக்கான மரத்தான் போட்டியில் முதல் பரிசு 5000 இரண்டாம் பரிசு 3000 மூன்றாம் பரிசு 2000 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த மாராத்தான் போட்டியில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *