Skip to content
Home » திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி அருகே மினி மாரத்தான் போட்டி… 600க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்பு…

திருச்சி மாவட்டம், குழுமணி அடுத்துள்ள எட்டரை கிராமத்தில் எட்டரை பகுதி சீருடை பணியாளர்கள், எட்டரை அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் மற்றும் ஸ்ரீரங்கம் தடகள சங்கம் இணைந்து முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் உடல் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 3 கிலோ மீட்டர் தூரத்தான மினி மாரத்தான் போட்டி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட 600-க்கும் மேற்பட்ட மாண மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கம் தடகள சங்கத்தின் தலைவர் தொழிலதிபர் ஐயர் அவள் தலைமையில் நடைபெற்ற போட்டியை ஜீவபுரம் காவல் துறை துணை கண்காணிப்பாளர் பாரதிதாசன் எட்டரை ஊர் காரியக்காரர் சௌந்தர்ராஜன் தேசிய தடகள பயிற்சியாளர் அண்ணாவை ஆகியோர் பெண்களுக்கான மினி மரத்தான் போட்டியை கொடியை சேர்த்து துவக்கி வைத்தார்கள். இதேபோல திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு திருச்சி காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் ஓய்வு பெற்ற தேசிய தடகள சங்கத்தின் துணை இயக்குனர் முனைவர் கலைச்செல்வன் மருத்துவர் ராஜ்குமார் ஆகியோர் ஆண்களுக்கான மாரத்தான் போட்டியை கொடியாசித்து துவக்கி வைத்தனர்.

மினி மரத்தான் அரசு பள்ளியில் இருந்து புறப்பட்டு ஒத்தக்கடை வரை சென்று மீண்டும் பள்ளி வந்து அடைந்தது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் 1வது பட்டாலியன் கமெண்டெண்ட் ஆனந்தன் முதல் பரிசாக ரூபாய்

3000 ,இரண்டாம் பரிசாக ரூபாய் 2000, மூன்றாம் பரிசாக ஆயிரம், நான்காம் பரிசாக ரூபாய் 700, 5ம் பரிசாக ரூபாய் 600, ஆறாவது பரிசாக ரூபாய் 500 மற்றும் சான்றிதழ் மற்றும் உசூல் கேடயங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் எட்டரை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்தலின்லிடியா, திருச்சி மாவட்ட தடகள சங்கத்தின் செயலாளர் ராஜு, சோமரசம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் உதயகுமார், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு கடலூர் ஜெய்சங்கர், போக்குவரத்து காவல் பிரிவு ஆய்வாளர் கிள்ளிவளவன்ரஞ்சினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!