திருச்சி மாவட்டம், மணப்பாறை பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் படுத்திருந்த ஓட்டுனர் வாயில் ரத்தம் வந்த நிலையில் கிடந்தைப் பார்த்த பொதுமக்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி அங்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சென்று பார்த்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து இருப்பது தெரியவந்தது. பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை போலீசார் இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி
விசாரணை நடத்திய போது இறந்தவர் தர்மபுரி மாவட்டம், அதியமான் கோட்டையைச் சேர்ந்த செல்வம் (45) என்பதும் மதுரையில் இருந்து பெங்களுக்கு டைல்ஸ் ஏற்றிச் சென்ற லாரி என்பதும் லாரியில் படுத்திருந்த டிரைவருக்கு திடீர் உடல்நலக்குறைவால் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சும்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.