Skip to content
Home » திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

திருச்சியில் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்….

திருச்சி மாவட்டத்தில் சுமார் 2400 மாட்டு வண்டி தொழிலாளர்கள் மாட்டு வண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றார்கள் தற்போது செயல்பட்டு கொண்டிருந்த மாதவப் பெருமாள் கோவில், மான்படிமங்கலம் தாளக்குடி, ஆகிய பகுதிகளில் இயங்கி வந்தா மணல் மாட்டு வண்டி குவாரிகள் பொங்களுக்கு முன் மூடப்பட்டது பொங்கல் முடிந்ததும் திறக்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் பொங்கல் முடிந்து ஒரு வார காலம் ஆகியும் இன்னும் மணல் குவாரிகள் திறக்கப்படவில்லை எனவும் எங்களது வாழ்வாதாரமே இந்த மாட்டு வண்டி தான் தற்போது 5 நாட்களுக்கு மேலாக குவாரிகள் திறக்கப்படாததால் எங்களது மாடுகளுக்கு தீவனம் கூட வாங்கி போட முடியவில்லை எனக் கூறி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மலைக்கோட்டை மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் செயலாளர் குணசேகரன் :-

பொங்கல் வரை மணல் மாட்டு வண்டிகள் இயங்கி வந்தன இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின் படி மணல் வா மாட்டு வண்டிக்கு லோடு போடாமல் நிறுத்தி உள்ளதாகவும் .இதனால் 2,408 குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால் லாரிக்கு வடுக குடி, புத்தூர் ஆகிய இரண்டு இடங்களில் லோடு நிரப்பப்படுகிறது.நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படுகிறார்கள்.

ஆனால் நாங்கள் இயந்திரங்கள் பயன்படுத்தாமல் மனிதர்களை வைத்து மணல் அள்ளுகிறோம் தொடர்ந்து 2,408 குடும்பத்தின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என நாங்கள் அலுவலகத்திற்கு வந்தோம் ஆனால் அதிகாரிகள் சரியாக பதில் அளிக்கவில்லை.

அதிகாரிகள் இப்படியே மௌனம் சாதித்தால் திங்கள் கிழமைக்கு மேல் குடும்பத்துடன் வந்து நீர்வளத்துறை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறினார்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!