Skip to content
Home » திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

திருச்சி அருகே மணல் திருட்டு… 5 பேர் எஸ்கேப்… மணல்-வாகனம் பறிமுதல்…

திருச்சி, திருவானைக்காவல் கீழே கொண்டையம் பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் அசோக் மேத்தா, நடுக்கொண்டையம் பேட்டை கரிகாலன் தெருவை சேர்ந்தவர் ரகுநாத், பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள பங்கையர்செல்வி குடி தெருவை சேர்ந்தவர் அம்மாசி மற்றும் பெயர் விலாசம் தெரியாத இரண்டு நபர்கள் என 5 பேர்.இதில் அம்மாசி என்பவர் மாட்டு வண்டி மூலம் அரசு அனுமதி இல்லாமல் கொள்ளிடம் ஆற்றில் ஏதோ ஒரு பகுதியிலிருந்து மாட்டு வண்டியில் மணலை திருடிக் கொண்டு வந்து கூத்தூர் குடித்தெரு ரேஷன் கடை அருகே உள்ள தனி நபருக்கு சொந்தமான காலி மனையில் கொட்டி உள்ளனர்.பின்னர் அங்கிருந்து மேற்க்கண்ட 5 பேரும் மணலை கடத்துவதற்க்காக அசோக் மேத்தா என்பவருக்கு சொந்தமான பொலிரோ பிக் அப் வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கொள்ளிடம் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் ரெஜி, தலைமை காவலர் பெட்ரிக் ஆரோக்கிய வசந்த், காவலர்கள் பெருமாள் மற்றும் முனுசாமி ஆகியோர் கூத்தூர் பணமங்கலம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாகனத்தில் மணல்ஏற்றிக் கொண்டிருந்த நபர்கள் போலீசாரை கண்டதும் வாகனத்தை விட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் ஒரு யூனிட் மணலுடன் நின்று கொண்டிருந்த பொலிரோ பிக் அப் வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து வந்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து மணல் திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *