தஞ்சை மாவட்டம் பாபநாசம் கோவத்தக்குடி மெலட்டூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் முகமது அலி ஜின்னா (49). இவர் சவுதி அரேபியா நாட்டிற்கு ஏர் இந்தியா விமானம் மூலம் செல்வதற்காக திருச்சி விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் 5வது கவுண்டரில் செல்லும்போது இமிகிரேஷன் அதிகாரி முகேஷ் ராம் கவுதம் தலைமையிலான அதிகாரிகள் சோதனை அவரது பாஸ்போர்ட் மற்றும் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது இவர் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்ய முயன்றது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அவரை விமான நிலையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விமான நிலையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு முகமது அலி ஜின்னாவை கைது செய்தனர்.