திருச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மலேசியா செல்வதற்காக பயணிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்களின் பாஸ்போர்ட்டை வாங்கி இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ,செல்லதுரை (வயது 48) என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்தபோது செல்லதுரை தனது பிறந்த தேதியை மாற்றி போலி பாஸ்போர்ட் பெற்று மலேசியா செல்ல முயன்றது தெரிய வந்தது.
இதேபோன்று ராமநாதபுரம் மாவட்டம், ஆர்எஸ் மங்கலம் பகுதியை சேர்ந்த சாகுல் அகமது (60) என்பவரின் பாஸ்போர்ட்டை வாங்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் போலி பாஸ் போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றது தெரிய வந்தது. இது தொடர்பாக இமிகிரேசன் அதிகாரி பவன் குமார் ஏர்போர்ட் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லதுரை,சாகுல் அமீது ஆகியோரை கைது செய்துள்ளனர்.