திருச்சி மேலப்புலிவார்டு ரோடு ஆர்.ஆர்.சபா அருகில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது .இதுகுறித்து திருச்சி டவுன் கிராம நிர்வாக அதிகாரி கிரேசி மேரி கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் ராஜு மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.