திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி சித்திரை தேரோட்டம் தொடங்கியது. தாயமானவர் சுவாமியும் அம்பாளும் ஒரு தேரிலும், மட்டுவார்குழலமை ஒரு தேரிலும் எழுந்தருளியுள்ளனர்.
மலைக்கோட்டை தேரினை முன்னிட்டு திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் மலைக்கோட்டை கோட்டம்
வெங்கடேஷ் காந்தி தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அன்னதானத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்குரைஞர் எம் சரவணன் பொது மக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் மலைக்கோட்டை முரளி பஜார் மைதீன் ஜங்ஷன் கோட்ட தலைவர் பிரியங்கா பட்டேல் சம்சுதீன் சங்கர் மோகன் கோகுல் கிருஷ்ணமூர்த்தி நொச்சயம் அசோக் ஜெயபிரகாஷ்
திமுக கூட்டணி கட்சி சார்பில் மயில் குணா ராஜபாண்டி ஆண்டாள் தெரு மணி சிந்தை முரளி சிந்தை வினோத் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.