தமிழ்நாடு ஓய்வுபெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு மற்றும் உலக மகளிர் தின விழா இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திருச்சி புத்தூர் டாக்டர் மதுரம் ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் ஆர்தர் காட்வின் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ஆஜிரா பீவி வரவேற்றார். தொட்டியம் வசந்தா, முசிறி பாலா, வட்டார கல்வி அதிகாரி
கவிஞர் ஜெயலட்சுமி, மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மாநில துணைத்தலைவர் கவிஞர் நந்தலாலா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநிலத்தலைவர் அருள்ஜோஸ், விழா பேருரையாற்றினார். மாநில பொருளார் சந்திரசேகரன் தீர்மானங்களை நிறைவேற்றினார். மாவட்ட செயலாளர் மாரிமுத்து நன்றி தெரிவித்தார். மரியசூசைமாணிக்கம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் ஓய்வு அரசு ஆசிரியர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு மரியாதை செய்தனர்.