திருச்சி மாவட்டம் , துறையூர் நகராட்சியில் பணிபுரியும் சரசு (54) என்ற பெண் தூய்மைப் பணியாளர் இன்று காலை குப்பை அரைக்கும் மிஷினில் பணியாற்றிய போது எதிர்பாராவிதமாக வலதுகை மிஷினின் கன்வேயர் பெல்ட்டில் சிக்கி அப்பெண்ணின் தோள்பட்டை வரை சிக்கி படுகாயம். திருச்சி அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர். பழுதடைந்த குப்பை அரைக்கும் மிஷினை சரியான முறையில் பழுது நீக்காமல் வைத்திருந்ததே விபத்திற்கு காரணம் எனவும், தூய்மைப் பணிக்கான உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை எனவும் சக ஊழியர்கள் குற்றச்சாட்டுகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.