Skip to content
Home » திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன்  அறிக்கை வௌியிட்டுள்ளார். அறிக்கையில் கூறியதாவது…   திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும் இருந்து வரும் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், நிர்வாகத் திறனற்ற மக்கள் விரோத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசையும் கண்டித்தும்.. திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில்.. கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான  R.B. உதயகுமார், M.L.A.,  தலைமையில் வரும் 31.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில்.. மரக்கடை எம்.ஜி.ஆர் திடல் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதுசமயம் மாவட்ட கழக நிர்வாகிகள், பகுதி கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், வட்டக் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள், தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று இவ்வாறு தெரிவித்துள்ளார்..