திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் திருச்சியில் இருந்து கம்பி ஏற்றி கொண்டு கர்நாடகா நோக்கி சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஜீயபுரம் பகுதி அல்லூர் அருகே சென்று கொண்டிருந்த போது திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை வைகோ நகரை சேர்ந்த மூர்த்தி (41) அவரது மகள் தர்ஷினி, மகன் குருசரண் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது கனரக லாரியை மூர்த்தி முந்த முயன்ற போது கனரக வாகனம் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனம் இது மோதியது. இதில் தந்தை, மகன், மகள் மூன்று பேரும் கனரக லாரி டயரில் சிக்கி சம்பவ இடத்தில் பலியாகினர். இச்சம்பவம் பற்றி தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜீயபுரம் போலீசார் உடலை மீட்டு அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.