திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எதுமலை சாலையில் உள்ள புவனேஸ்வரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சரவணன் (வயது 28).இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருந்து கம்பெனியில் விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார்.
இதற்கிடையே ஒரு பெண்ணை அவர் காதலித்து வந்துள்ளார். ஆனால் இக்காதல் தோல்வியில் முடிந்தது.
இதனால் விரக்தி அடைந்த சரவணன் கடந்த சில தினங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்கி கிடந்தார்.
பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தனது தாயாரின் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து அவரது தாய் தேன்மொழி மண்ணச்சநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.