திருச்சி ராம்ஜி நகர் அருகே நவலூர் குட்டப்பட்டு பகுதியில் தேசிய சட்டப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவருக்கு சக மாணவர்கள் குளிர்பானத்தில் சிறுநீரை கலந்து கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது இந்த விவகாரத்தை விசாரணை செய்ய உதவி பேராசிரியர்கள் கொண்டு அமைக்கப்பட்டு இருந்த குழு மாணவர்கள் சிறுநீர் கலந்து கொடுத்த விவகாரத்தில் உண்மை தன்மை இருப்பதாக அறிக்கை அளித்து இருந்தது.
இதனை அடுத்த
இரண்டு பெற்றோர்கள் இரண்டு உதவி பேராசிரியர்கள் இரண்டு கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்தவர்கள் என 9 பேரால் உருவாக்கப்பட்ட ஆண்டி ராகிங் குழு ( ராகிங் தடுப்புக்குழு ) ஏற்கனவே நிர்வாகத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அந்த இரண்டு மாணவர்கள் மீது உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டும் – மற்றொன்று இந்த செமஸ்டரை அந்த இரண்டு மாணவர்கள் மீண்டும் படிக்க வேண்டும் என்று பரிந்துரை வழங்கியிருந்தது.
ஏற்கனவே இந்த மாணவர்கள் வருகின்ற 31ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டும் – இவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது – இந்த நிலையில் தற்போது பரிந்துரை குழுவின் நிபந்தனையை ஏற்றுக் கொண்ட சட்டப் பள்ளி குறிப்பிட்ட இரண்டு மாணவர்கள் தங்களது செமஸ்டரை அடுத்த கல்வி ஆண்டில் மீண்டும் தொடர உத்தரவு பிறப்பித்துள்ளது