திருச்சி மணச்சநல்லூர் ஈச்சம்பட்டி நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி மேகலா( 28) இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் இவர் தமிழக அரசின் தொடக்கப்பள்ளி காலை உணவு திட்டத்தில் ஈச்சம்பட்டியில் உள்ள ஒரு பள்ளியில் பணியாற்றி வந்தார் மேலும் அந்த பணியை முடித்துவிட்டு நம்பர் ஒன் டோல்கேட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
கணவர் ரமேஷ் பழக்கடைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திக் கொள்ள மனைவியிடம் கூறினார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த மேகலா யாரும் எதிர்பாராத விதமாக தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சமயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தபோதிலும் மேகலா சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது சகோதரர் வீரவேல் மணச்சநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.