திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மகிழம்பாடி ராணுவ குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சோவிக்கன்ராஜ்(58). இவருடைய மனைவி ராணி(52). கூலித்தொழிலாளியான சோவிக்கன் ராஜ் தனது மனைவி மற்றும் மகன்களுடன் வசித்து வந்தார்.இந்நிலையில் சமயபுரம் அருகே இருங்களூர் பகுதியில் உள்ள தனது சகோதரியின் இல்ல விழாவில் கலந்து கொள்ள கடந்த 29ம் தேதி காலையில் சோபிக்கன்ராஜ் தனது மகன்களுடன் சென்றுள்ளார். ராணி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். விழாவை முடித்துவிட்டு அன்று மாலை 4 மணி அளவில் வீட்டிற்கு வந்த சோவிக்கன்ராஜ் தனது மனைவியை பார்த்தபோது காணவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த சோவிக்கன்ராஜ் பல்வேறு இடங்களில் தனது மனைவியை தேடியுள்ளார். எங்கும் கிடைக்காத நிலையில் இது குறித்து சமயபுரம் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.புகாரின் பேரில் சமயபுரம் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மயமான பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.
