கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் வருகிற 15-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்துக்காக 1.63 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்பத் தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வங்கி கணக்குகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் மகளிர் உரிமை தொகைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெறவில்லை என கருதி திருச்சிபுத்தூர் வண்ணாரப்பேட்டை பகுதியில் நியாய விலை கடை முன்பு 20க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம் நடத்தினர்.அவர்கள் கூறுகையில்,உரிமைத்தொகை வழங்குவதற்காக ஏ.டி.எம் கார்டு எங்கள் பகுதியில் ஐந்து பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எங்களுக்கும் ஆயிரம் வேணும் என்று அவர்கள் கூறினர்.