Skip to content

திருச்சியில் குட்கா, பான் மசாலா விற்ற 10 கடைகளுக்கு சீல்…

  • by Authour

தமிழக அரசு பல இளைஞர்கள் புகையிலை பான்மசாலா குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளுக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது.

இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இளைஞர்கள் போதை பொருளுக்கு அடிமையாகாமல் இருக்க தமிழக அரசு தமிழகம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான் மசாலா பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில் அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள புகையிலை, பான் மசாலா போன்ற பொருட்களை விற்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி எஸ் பி வருண்குமார் திருச்சி மாவட்டத்தில் புகையிலை குட்கா பான் மசாலா விற்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த நிலையில் உணவு பாதுகாப்பு பிரிவின இது போன்ற தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை விற்பவர்கள் மீது சட்டபடியாக நடவடிக்கை எடுப்பதுடன் அவர்களது கடைகளுக்கு சீல் வைத்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கடந்த ஒரு வார காலத்தில் திருவெறும்பூர் உட்பட்ட பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பான் மசாலா விற்றதாக சுமார் 10 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *